படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் டி.சிவராமின் 17 ஆம் நினைவு தினத்தினை முன்னிட்டு இன்றையதினம் வெள்ளிக்கிழமை 29ஆம் திகதி மட்டக்களப்பில் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்து.
அதேநேரம், அவரின் மறைவுக்கு நினைவேந்தல் நிகழ்வும் முன்னெடுக்கப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் மற்றும் மட்டு.ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வுகள் நடைபெற்றது.
இலங்கையில் படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதிவேண்டியும் நாட்டில் இடம்பெற்றுவரும் ஊடகவியலாளர்களுக்கு எதிரான அடக்குமுறையினை கண்டித்தும் தமிழ் மக்களின் உரிமையினை அங்கிகரிக்க கோரியும் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதில் நான் உட்பட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் மற்றும் மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன், பிரதி முதல்வர், உள்ளூராட்சி உறுப்பினர்கள் உட்பட அரசியல் கட்சி பிரமுகர்கள், மட்டக்களப்பு தமிழரசுக்கட்சி வாலிபர் முன்னணித் தலைவர், உறுப்பினர்கள் ஊடகவியலாளர்கள் மற்றும் சமூகபிரதிநிதிகள், பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டார்கள்.
2005ஆம் ஆண்டு ஏப்ரல் 28 ஆம் திகதியன்று இரவு வேளையில் கொழும்பு பம்பலபிட்டி பொலிஸ் நிலையத்துக்கு முன்னால் வைத்து நான்கு பேரால் சிவராம் கடத்திச்செல்லப்பட்டார்.
பின்னர் அடுத்த நாள் காலையில் நாடாளுமன்றுக்கு அருகில் உள்ள பாலம் ஒன்றின் அருகில் தாக்கப்பட்டு தலையில் துப்பாக்கி சூட்டு காயங்களுடன்சடலமாக மீட்கப்பட்டார்.
1988 இல் சக ஊடகவியலாளர், செயற்பாட்டாளர் மற்றும் நடிகரான ரிச்சர்ட் டி சொய்சாவின் உந்துதலால், ஐக்கிய நாடுகளின் நிதியுதவி பெற்ற இண்டர் பிரஸ் சேர்விசின் செய்தியாளராக நியமனம் பெற்றார்.
1989 இல், தெ ஐலேன்ட் செய்தித்தாளுக்கு அரசியல் ஆய்வாளர் ஒருவர் தேவைப்பட்டபோது, டி சொய்சா சிவராமை பரிந்துரைத்தார்.