ஒரேயொரு வெற்றி போதும்: 4 அணிகளை பின்னுக்கு தள்ளப்போகும் சிஎஸ்கே!

Date:

ஐபிஎல் 15ஆவது சீசன் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில், சாம்பியன் அணிகளான சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் தொடர் தோல்விகளை சந்தித்து பின்னடைவைச் சந்தித்து வருகின்றன.

மும்பை இந்தியன்ஸ் அணி முதல் 8 போட்டிகளிலும் தோற்று, கடைசி இடத்தில் நீடித்து வரும் நிலையில், சிஎஸ்கே துவக்க போட்டிகளில் சொதப்பி பிறகு அதிலிருந்து மீண்டு 7 போட்டிகளில் 2 வெற்றிகளுடன் 9ஆவது இடத்தில் நீடித்து வருகிறது.

முதல் நான்கு இடங்கள்:

முதல் மூன்று இடங்களில் குஜராத் டைடன்ஸ், சன் ரைசர்ஸ் ஹைதராபாத், ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ அணிகள் 10 புள்ளிகளுடன் முதல் நான்கு இடங்களில் நீடித்து வருகின்றன.

அடுத்த நான்கு இடங்கள்:

5ஆவது இடத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 10 புள்ளியுடன் உள்ளது. டெல்லி கேபிடல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் 6 புள்ளிகளுடன் 6,7,8 ஆகிய இடங்களில் உள்ளன.

சிஎஸ்கேவுக்கு வாய்ப்பு:

தற்போது 4 புள்ளிகளுடன் 9ஆவது இடத்தில் சிஎஸ்கே அணி, அடுத்த போட்டியில் அபார வெற்றியைப் பெறும் பட்சத்தில் 6ஆவது இடத்தை அடைந்துவிட முடியும்.

இன்று நடைபெறவுள்ள ஆட்டத்தில் பஞ்சாப் அணியை சிஎஸ்கே எதிர்கொள்ள உள்ளது. இதில் சிஎஸ்கே அபார வெற்றியைப் பெற்றாக வேண்டும். இதனால் ரன் ரேட் அடிப்படையில் 6 புள்ளிகளுடன் டெல்லி, கொல்கத்தா, பஞ்சாப் அணியை சிஎஸ்கேவால் பின்னுக்குத் தள்ளி, 6ஆவது இடத்தை பிடித்துவிட முடியும். மும்பையை சேர்த்து மொத்தம் 4 அணிகளை பின்னுக்கு தள்ளிவிட முடியும்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அடுத்த 7 போட்டிகளில் 6 வெற்றிகளை பெற்றால் மட்டுமே பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

மண் மேடு சரிந்து புதையுண்ட 6 பேர்:மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி!

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ராணி தோட்டத்தில் இன்று...

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...