காலி முகத்திடலில் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்த தேரிப்பேஹே சிறிதம்ம தேரர் சுகவீனமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
தேரர் இன்று காலை பொது வைத்தியசாலையில் (ETU) பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பில் காலி முகத்திடலில் உள்ள ஜனாதிபதி அலுவலகத்திற்கு முன்பாக சிறிதம்ம தேரர் சாகும் வரை உண்ணாவிரதத்தை கடந்த புதன்கிழமை ஆரம்பித்தார்.
இந்நிலையிலேயே அவர் இன்றைய தினம் உடல்நலக்குறைவால் திடீரென வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
அரசாங்கத்திற்கு எதிராகவும் ஜனாதிபதியை பதவி விலகுமாறும் வலியுறுத்தி காலிமுகத்திடலில் 14 ஆவது நாளாக தொடர்ச்சியாக போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இதேவேளை ரத்துபஸ்வெலயில் நீருக்கான போராட்டத்தை வழிநடத்திய தெரிபெஹே சிறிதம்ம தேரர் கொழும்பு ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டத்தில் சாகும் வரையான உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.