தற்போதைய அரசாங்கத்திற்கு எதிராக 120 பாராளுமன்ற உறுப்பினர்கள் இருப்பதாக பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில இன்று (25) தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
தற்போது அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கான மிக எளிமையான வரைவை தயாரித்து ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் தேசிய மக்கள் முன்னியுடன் கலந்துரையாடியுள்ளதாக தெரிவித்தார்.
அரசாங்கத்திற்கு எதிராக 113 உறுப்பினர்களை சேர்க்கும் வரை பொறுமை காக்குமாறு மக்களிடம் ஐக்கிய மக்கள் சக்தி கோரிக்கை விடுத்துள்ளதாகவும் தற்போது 113 உறுப்பினர்களுக்கு பதிலாக 120 உறுப்பினர்கள் இருப்பதாகவும் கம்மன்பில தெரிவித்தார்.
மேலும், அரசாங்கத்தின் 39 சுயேட்;சை உறுப்பினர்களில் 65 பேர் சேர்க்கப்பட்ட போது 104 பேர் இருந்ததாகவும், சர்வகட்சி அரசாங்கத்தை அமைக்குமாறு அரசாங்கத்திற்கு கடிதம் அனுப்பிய மொட்டுக் கட்சியின் 10 உறுப்பினர்களுடன் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 114 ஆனது எனவும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை 20ஆவது திருத்தச் சட்டத்தில் அரசாங்கத்திற்கு ஆதரவளித்த மூன்று முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் இராஜினாமா செய்ததன் மூலம் மொத்த பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 117 என தெரிவித்த கம்மன்பில, அமைச்சர் நாலக கொடஹேவா, டலஸ் அழகப்பெரும மற்றும் சரித ஹேரத் ஆகியோரும் 120 எம்.பி.க்களை தன்னுடன் வைத்திருப்பதாகவும் கூறினார்.