இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடியை எவ்வாறு சமாளிப்பது என்ற தொனிப்பொருளில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு விசேட கலந்துரையாடல் நிகழ்வொன்று இடம்பெறவுள்ளது.
‘இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடியை எவ்வாறு சமாளிப்பது’ என்ற தொனிப்பொருளில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள விசேட நிகழ்வை எதிர்வரும் 27ஆம் திகதி பாராளுமன்றத்தில் நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.
அதற்கமைய எதிர்வரும் 27ஆம் திகதி பிற்பகல் 2.30 மணிக்கு பாராளுமன்றக் குழு அறை இலக்கம் 01 இல் இந்த விசேட நிகழ்வு நடைபெறவுள்ளது.
இதனை பாராளுமன்ற அரசாங்க நிதி பற்றிய குழு ஏற்பாடு செய்துள்ளது.
இந்நிகழ்வில் பிரதான வளவாளராக கலாநிதி ஸ்வர்னிம் வாக்லே கலந்துகொள்ளவுள்ளார்.
இவர் தற்பொழுது பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் மூலோபாய விசேட நிபுணராக 36 நாடுகளுடன் பணியாற்றி வருகிறார்.
மேலும் உலக வங்கியின் சிரேஷ்ட பொருளியலாளராகவும் பணியாற்றியுள்ளார். இந்த விசேட நிகழ்வில் அனைத்துப் பாராளுமன்ற உறுப்பினர்களையும் கலந்துகொள்ளுமாறு அரசாங்க நிதி பற்றிய குழு அழைப்பு விடுத்துள்ளது.