தேசிய மக்கள் சக்தி மற்றும் மக்கள் விடுதலை முன்னணியின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்டுள்ள மக்கள் பேரணி இன்று மூன்றாவது இடம்பெற்று வருகின்றது.
அதற்கமைய நேற்றுமுன்தினம் ஆரம்பிக்கப்பட்ட குறித்த மக்கள் பேரணி பேருவளையிலிருந்து ஆரம்பிக்கப்பட்டு இன்றையதினம் கொழும்பை வந்தடையவுள்ளது.
நேற்று வாதுவையில் ஆரம்பமாகி மொரட்டுவை நோக்கி வந்த பேரணி காலி – கொழும்பு நகர மண்டபத்திற்கு வந்து நிறைவடையவுள்ளது.
தற்போதைய ஆட்சியாளர்களை பதவி விலகக் கோரியும் மக்கள் நேய ஆட்சி ஒன்றை நாட்டில் ஏற்படுத்துமாறு வலியுறுத்தியும் பேருவளை நகரிலிருந்து இந்த மக்கள் பேரணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்த எதிர்ப்பு பேரணியில் பெருமளவான மக்கள் கலந்துகொண்டதுடன் மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி.) தலைவர் அனுரகுமார திஸாநாயக்க மற்றும் ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சியின் உறுப்பினர்களும் இந்த மக்கள் பேரணியின் கலந்துகொண்டனர்.
தற்போது காணப்படும் மக்களை நெருக்கடிக்குள்ளாக்கும் அரசாங்கத்தை விரட்டியடித்து, மக்கள் மயப்படுத்தப்பட்ட அரசாங்கம் ஒன்றை கட்டியெழுப்புவோம் என்ற அடிப்படிடையில் இந்த பேரணி முன்னெடுக்கப்படுகின்றது.