தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தம்: கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகள் முடங்கியது!

Date:

சமகால அரசாங்கத்திற்கு எதிராக எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கொழும்பு நகரம் தற்போது முழுமையாக முடங்கியுள்ளது.

நாடளாவிய ரீதியில் அரச மற்றும் தனியார் துறையின் தொழிற்சங்கங்களின் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் நாடு முழுவதும் கடைகள், வியாபார நிலையஙக்ள், உணவகங்கள் உள்ளிட்ட அனைத்து இடங்களும் மூடப்பட்டுள்ளதுடன் கொழும்பு கோட்டை மற்றும் புறக்கோட்டை பகுதிகள் முடங்கியுள்ளது.

இதேவேளை மலையகத்தில் உள்ள பிரதான இரு கட்சிகளான தமிழ்த் முற்போக்கு கூட்டணி, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் என்பன இப்போராட்டத்துக்கு தமது ஆதரவை வெளிப்படுத்தியிருந்தன.

இதற்கமைய தோட்டத் தொழிலாளர்கள் இன்று வேலைக்கு செல்லவில்லை. வீடுகளுக்கு முன்னால் கறுப்பு கொடிகளை பறக்கவிட்டு எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

மலையக பெருந்தோட்ட பகுதிகளை அண்டியுள்ள நகரங்களில் 90 வீதான வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டிருந்தன. கறுப்பு கொடிகள் பறக்கவிடப்பட்டிருந்தன. ஒரு சில வர்த்தக நிலையங்கள் திறக்கப்பட்டிருந்தன.

அதேபோல சதொச, எரிபொருள் நிலையங்கள் திறக்கப்பட்டிருந்தன. இவற்றின் முன்னால் நீண்ட வரிசை காணப்பட்டது. பாடசாலைகள் முற்றாக ஸ்தம்பித்திருந்தது.

Popular

More like this
Related

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் காரணமாக இலங்கை பொருளாதாரத்தில் ஏற்படக்கூடிய தாக்கம் குறித்து கலந்துரையாடல்

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போதைய போர்ச் சூழல் காரணமாக இலங்கையின் பொருளாதாரத்தில்...

புத்தளம் ஆதார வைத்தியசாலை மத்திய அரசாங்கத்தின் கீழ்:

தற்போது வடமேல் மாகாண சபையின் கீழ் இயங்கி வரும் புத்தளம் ஆதார...

ஐக்கிய அரபு அமீரக ஜனாதிபதியுடன் ஜனாதிபதி அநுர பேச்சு!

ஐக்கிய அரபு அமீரகம் அண்மையில் எதிர்கொண்ட தாக்குதல்கள் குறித்துத் தனது கவலையைத்...

இலங்கை கடற்பரப்பில் ஈரானிய கப்பல் மீதான தாக்குதலில் 100-க்கும் மேற்பட்டோர் மாயம்: ரெய்ட்டர்ஸ் தகவல்

இலங்கை கடற்கரையில் ஈரானிய கப்பலின் மீது சந்தேகத்திற்கிடமான நீர்மூழ்கிக் கப்பல் நடத்திய...