நாட்டை மீட்க வேண்டுமாயின் ஆட்சி பொறுப்பை ஏற்க தான் தயார்: சஜித் பிரேமதாச!

Date:

தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்க வேண்டுமாயின் ஆட்சி பொறுப்பை ஏற்க தான் தயாராக இருப்பதாகவும், அவ்வாறு ஆட்சி பொறுப்பை ஏற்க வேண்டுமெனில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை  முழுமையாக நீக்கப்பட வேண்டுமெனவும் எதிர் கட்சி தலைவர் சஜித் பிரேமதாச  சற்றுமுன் சபையில் பகிரங்கமாக அறிவித்தாா்.

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையிருந்து நாட்டை மீட்பதற்கான  ஐக்கிய மக்கள் முன்னணியின் சார்பில் யோசனைகளை முவைக்கப்பட்டது. இதன்போதே அவர் இதனைக் குறிப்பிட்டாா்.

20 ஆவது திருத்தச் சட்டத்தினூடாக ஜனாதிபதிக்கு சாதாரண நிறைவேற்று அதிகாரம் அல்லாமல் சிறப்பு நிறைவேற்று அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதனை நீக்க வேண்டியது அவசியமாகும்.

அவ்வாறானதொரு அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் கீழ் தற்காலிக அரசாங்கமோ இடைக்கால அரசாங்கமோ கொண்டு செல்ல முடியாது. ராஜபக்ஷக்களின் தலைமைத்துவம் அல்லது அவர்களுடன் தொடர்புடையோா் இந்த செயற்பாடுகளிலிருந்து விலகி இருப்பார்களாயின் நாம் பேச்சுவார்த்தைக்கு தயாா்.

இந்த நாட்டு மக்கள் மோசமான வகையில் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த பாதிப்பிலிருந்த அவர்களை துரிதமாக மீட்டெடுக்க வேண்டியது அவசியமே என்றும் அவர் குறிப்பிட்டார்.

Popular

More like this
Related

2026 கொமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் இலங்கைக்கு பெருமை சேர்த்த ருமேஷ் தரங்க!

2026 கொமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில், இலங்கையின் 23 வயதான ருமேஷ் தரங்க...

யாழ்ப்பாணம் மற்றும் கண்டி வரை மெட்ரோ பேருந்து!

எதிர்வரும் நாட்களில் புதிய மெட்ரோ பேருந்துகள் சேவையில் இணைக்கப்படவுள்ளதுடன், ஆண்டின் இறுதிக்குள்...

புத்தளம் பெரிய பள்ளிவாசலுக்கு சலீம் ஆசிரியரை தலைவராகக் கொண்ட புதிய நிர்வாக சபை தெரிவு.

நேற்று புத்தளம் பெரிய பள்ளிவாசலுக்கான புதிய நிர்வாக சபை தெரிவுக்குரிய நிகழ்வுகள்...

பல்கலைக்கழக பிரவேசத்திற்கான வெட்டுப் புள்ளிகள் வெளியீடு!

2025 க.பொ.த. உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில், பல்கலைக்கழகங்களில் உள்ள ஒவ்வொரு...