திறைசேரி மற்றும் நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகல இராஜினாமா செய்துள்ளார்.
தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் இன்று கையளித்ததாக ஆட்டிகல உறுதிப்படுத்தினார்.
திறைசேரி மற்றும் நிதி அமைச்சின் செயலாளராக ஆட்டிகல 2019 நவம்பர் 19 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் நியமிக்கப்பட்டார்.
பல அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, அவர் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
நான்கு பேர் கொண்ட தற்காலிக அமைச்சரவையின் கீழ் நிதி அமைச்சராக நேற்று நியமிக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரியும் தனது இலாகாவிலிருந்து விலகுவதாக இன்று அறிவித்துள்ளார்.
இலங்கையின், பொருளாதாரம் வீழ்ச்சியடைந்ததற்குக் காரணமான ஜனாதிபதி மற்றும் அவரது அரசாங்கத்திற்கு எதிராக பொதுமக்களின் தொடர்ச்சியான எதிர்ப்புக்கள் போராட்டங்கள் காரணமாக பல உயர்மட்ட அரச அதிகாரிகள் பதவி விலகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.