சட்டமா அதிபருக்கு எதிராக சில பாராளுமன்ற உறுப்பினர்கள் ஊடாக பதவி நீக்க பிரேரணையை கொண்டுவர சட்டத்துறை தீர்மானித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் விஜேதாச ராஜபக்ஷ இன்று தெரிவித்துள்ளார்.
அதேநேரம், ‘நாட்டின் தற்போதைய நெருக்கடிக்கு சட்டமன்றம் மற்றும் நிறைவேற்று அதிகாரம் மட்டுமல்ல, நீதித்துறையும் பொறுப்பு’ என்று ராஜபக்ஷ பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
இதன்போது கருத்து மேலும் கருத்து தெரிவிக்கையில்,
‘சில வழக்குகளுக்கு வரும்போது, சட்டமா அதிபர் தனது கடமையில் தவறிவிட்டார் என்று சட்டத்துறையினர் கருதுகின்றனர். மல்வான பகுதி காணி கொள்வனவு தொடர்பான வழக்கு, சட்டமா அதிபர், நீதித்துறைக்கு சாட்சியங்களை சமர்ப்பிக்கத் தவறியதால், முடிவுக்கு வந்துள்ளது.
எனவே, சட்டமா அதிபர் தனது கடமைகளில் தவறிவிட்டார் என்று கருதும் சட்டத்துறையினர், அவருக்கு எதிராக சட்டமன்றத்தின் ஊடாக பதவி நீக்கப் பிரேரணையைக் கொண்டுவரத் திட்டமிட்டுள்ளனர்’ என்று விஜேயதாச ராஜபக்ஷ கூறினார்.
மேலும், ‘மக்களின் கோரிக்கையை பாராளுமன்றமும் ஜனாதிபதியும் நிறைவேற்ற வேண்டும் என்பதை இன்றைய சூழ்நிலை கோருகிறது.
மக்கள் அவர் பதவி விலக வேண்டும் என்பதை ஜனாதிபதி புரிந்து கொள்ள வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நிதி அமைச்சர் இல்லை. திறைசேரி வெற்றிடமாக இருப்பதால் புதிய நிதி அமைச்சர் நியமிக்கப்படவில்லை. நெருக்கடிக்கு தீர்வு காணும் திட்டத்தை கொண்டு வந்துள்ளேன். தயவு செய்து பரிசீலனை செய்யுங்கள், எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.