பாகிஸ்தான் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது: 90 நாட்களில் தேர்தல் நடத்தப்படும் என அறிவிப்பு

Date:

பாராளுமன்றத்தை கலைத்து விட்டு தேர்தல் நடத்த வேண்டும். பாகிஸ்தான் மக்கள் தேர்தலுக்கு தயாராக வேண்டும் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானில் பணவீக்கம் அதிகரித்து, பொருளாதார நெருக்கடி எழுந்துள்ள நிலையில், பிரதமர் இம்ரான் கானை பதவிநீக்கம் செய்ய பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டது.

இதற்கிடையே, பாகிஸ்தான் பாராளுமன்றம் இன்று காலை கூடியபோது இம்ரான் கான் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் துணை சபாநாயகரால் ரத்து செய்யப்பட்டது. இந்த தீர்மானம் அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது எனக்கூறி தீர்மானத்தை நிராகரித்தார்.

இந்நிலையில் பாகிஸ்தான் பாராளுமன்றத்தை கலைக்குமாறு பாகிஸ்தான், பிரதமர் இம்ரான் கான், அந்நாட்டு ஜனாதிபதியை வலியுறுத்தியுள்ளார்.

முன்னதாக நடந்த பாராளுமன்றத்தில் கடும் அமளி துமளி ஏற்பட்டது. பிரதமர் இம்ரானின் கோரிக்கையை ஏற்று ஜனாதிபதி ஆரீப் அல்வி, பாராளுமன்றத்தை கலைக்கப்பட்டதாக அறிவித்துள்ளார். மேலும், 90 நாளில் தேர்தலை நடத்தப்படும் என பாகிஸ்தான் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை அரசுக்கு எதிரான சதியில் வெளிநாட்டிற்கு தொடர்பு உள்ளது. பாகிஸ்தான் பாராளுமன்றத்தை கலைக்க வேண்டும் என அதிபருக்கு கடிதம் எழுதியுள்ளேன். ஜனநாயக முறைப்படி தேர்தல் நடத்த வேண்டும். தேர்தலுக்கு மக்கள் தயாராக வேண்டும் எனவும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அரசுக்கு ஆதரவு அளித்து வந்த கட்சிகள், எதிர்க்கட்சிகளுடன் கை கோர்த்தன. இதனால், இம்ரான் கான் பெரும்பான்மை இழந்தார். இருப்பினும் பதவியில் இருந்து விலக மறுத்து , கடைசி வரை போராடுவேன் எனக்கூறியிருந்தார்.

இந்நிலையில் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான ஓட்டெடுப்பு இன்று நடப்பதாக இருந்தது. ஆனால் பாராளுமன்றதம் கூடியதும் துணை சபாநாயகர் நம்பிக்கையில்லா தீர்மானம் அரசியல் சாசனத்திற்கு எதிரானது எனக்கூறி, அதனை நிராகரித்தார். தொடர்ந்து பாராளுமன்றத்தை 25 ஆம் திகதி ஒத்திவைத்தார்.

Popular

More like this
Related

சுற்றுலாத்துறை வருமானமாக முதல் 10 மாதங்களில் 2,659 மில். டொலர்கள்

இந்த வருடத்தின் முதல் 10 மாதங்களில் சுற்றுலாத்துறை வருமானமாக 2,659 மில்லியன்...

பொலித்தீன் பைகளுக்கு மாற்றாக காகிதப் பைகளுக்கு பரிந்துரை!

பொலித்தீன் பைகளுக்கு மாற்றாக சுற்றுச்சூழலுக்கு உகந்த காகிதப் பைகளைத் தயாரிக்கும் முயற்சியில்...

மாணவர்கள் மீதான ஒடுக்குமுறை: பங்களாதேஷ் முன்னாள் பிரதமர் குற்றவாளி என தீர்ப்பு!

பங்களாதேஷ் வன்முறையில் இளைஞர்கள் கொல்லப்பட்டது தொடர்பான வழக்கில் முன்னாள் பிரதமர் ஷேக்...

கெஹெலிய குடும்பத்திற்கு எதிராக 3 வழக்குகளில் குற்றப்பத்திரம் தாக்கல்

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, அவரது மகன் ரமித் ரம்புக்வெல்ல, மகள்...