இன்றையதினம் இடம்பெற்ற பாராளுமன்ற அமர்விற்கு ஜனாதிபதி வருகைத் தந்துள்ளார்.
இதனிடையே பாராளுமன்றத்தில் அமளிதுமளி ஏற்பட்டுள்ளது. எதிர்க்கட்சி உறுப்பினர்கள் #GoHomeGota என்று கோஷமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தற்போதைய நெருக்கடி நிலை தொடர்பான இரண்டாம் நாள் நாடாளுமன்ற விவாதம் தற்போது இடம்பெற்று வருகின்றது.
ஜனாதிபதியின் வருகையின்போது எதிர்க்கட்சியினர் கூச்சலிட்டு தமது எதிர்ப்பை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.