அனைத்து பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியத்தின் எதிர்ப்பு பேரணி தற்போது விஜேயராம பகுதியை வந்தடைந்துள்ளது.
இவர்கள் விஜேராம பகுதியில் உள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் இல்லத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதனால் குறித்த பகுதியில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொழும்பு புறக்கோட்டையில் இருந்து ஜனாதிபதி செயலகம் நோக்கி பேரணியை நடத்துவதற்கு ஆரம்பத்தில் மாணவர்கள் திட்டமிட்டிருந்தனர்.
எனினும் தற்போது, காலிமுகத்திடலில் பகுதிக்கு செல்ல முடியாதவாறு வீதித்தடைகளை போட்டும் மற்றும் நீதிமன்றத்தின் தடையுத்தரவை பெற்றும் பொலிஸார் பேரணியை தடுத்து நிறுத்தியுள்ளனர்.
இவ்வாறான நிலைமையில் மாணவர்கள் கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்னால் இருந்து மருதானை ஊடாக பிரதமரின் இல்லத்திற்கு முன்னால் சென்று போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.