பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவைத் தவிர அனைத்து அமைச்சரவை அமைச்சர்களும் இராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளனர்.
“பிரதமர் தொடர்ந்து செயல்படுவார் மற்றும் அமைச்சரவையில் உள்ள மற்ற அனைத்து உறுப்பினர்களும் தங்கள் இராஜினாமா கடிதங்களை பிரதமருக்கு வழங்கியுள்ளனர்”.
அமைச்சர்கள் தமது இராஜினாமா கடிதத்தை பிரதமரிடம் கையளித்துள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினரும் சபைத் தலைவருமான தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தனது பதவியில் நீடிக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அரசாங்கத்திற்கு எதிராக போராட்டங்கள் வலுப்பெற்று வரும் பின்னணியில் இவ்வாறு அமைச்சரவை கலைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை நீதியமைச்சர் அலி சப்ரி இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர ஆகியோர் தமது அமைச்சுப் பதவியிலிருந்து இராஜினாமாவை கையளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.