எதிர்க்கட்சிகள் கூறுவது போல் இதுவரை மருந்து தட்டுப்பாடு காரணமாக நாட்டில் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை என சுகாதார அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமண தெரிவித்துள்ளார்.
அதேநேரம் அடுத்த மூன்று மாதங்களில் சில மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்படும், சில மருந்துகளின் கையிருப்புகளைப் பெறுவதற்கு சுமார் 90 நாட்கள் ஆகும் என்றும், மருந்துப் பற்றாக்குறையின் தாக்கத்தைக் குறைக்க அமைச்சு அனைத்து முயற்சிகளையும் எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இடம்பெற்ற அமர்வின் போது அவர் இந்தக் கருத்தை தெரிவித்துள்ளார்.
இதன்போது, நாட்டில் நிலவும் டொலர் நெருக்கடி காரணமாக இந்தத் தாமதம், ஏற்பட்டுள்ளது.
‘உலக வங்கி மற்றும் ஆசிய வங்கி ஆகியவை அத்தியாவசிய மருந்துகளை வாங்குவதற்கு எங்களுக்கு ஆதரவளிக்க முன்வந்துள்ளன.
உலக சுகாதார அமைப்பு (WHO) அடுத்த இரண்டு வாரங்களில் எங்களுக்கு அவசரகால மருந்துகளை வழங்கும். நாங்கள் செஞ்சிலுவை சங்கத்தின் உதவியையும் நாடியுள்ளோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், உயிர் காக்கும் பதினான்கு மருந்துகளில் ஒன்றிற்கும், 646 அத்தியாவசிய மருந்துகளில் 37க்கும், அத்தியாவசியமற்ற 486 மருந்துகளில் 48இற்கும் தற்போது தட்டுப்பாடு நிலவுவதாக அமைச்சர் கூறினார்.
.