மிரிஹானவில் உள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் வீட்டிற்கு முன்பாக 53 வயதுடைய ஆண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மின்வெட்டை உடனடியாக நிறுத்தக் கோரி, அந்த நபர் மின்கம்பி மீது ஏறி நின்றதுடன் அதிலிருந்து கீழே விழுந்து தற்கொலை செய்துகொண்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தின் போது அவர் போதையில் இருந்ததாகவும் மின்சாரம் தாக்கி தற்கொலை செய்து கொண்டதாகவும் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.