‘யார் ஆட்சியில் இருந்தாலும் சீனாவின் ஆதரவு இலங்கை மக்களுக்குத்தான்’: சீனத் தூதுவர்

Date:

சர்வதேச நாணய நிதியத்தின் உடனான இலங்கையின் தற்போதைய பேச்சுவார்த்தைகள் தவிர்க்க முடியாமல் 2.5 பில்லியன் அமெரிக்க டொலர்களை பெற்றுக்கொள்வதற்காக சீனாவுடனான அதன் கலந்துரையாடல்களில் பாதிப்பை ஏற்படுத்தும் என சீனாவின் தூதுவர் கி சென்ஹொங் தெரிவித்துள்ளார்.

பத்திரிகையாளர்கள் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

இதன்போது, உரையாடலில், விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை அறிய பேச்சுவார்த்தைகளை சீனா உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகக் கூறினார்.

கடன் மறுசீரமைப்பு சர்வதேச நாணய நிதியத்தின் முக்கிய அங்கமாக இருக்கும் என்று அவர் கூறினார்,
இதேவேளை இலங்கைக்கு சீனாவின் ஆதரவு ஒரு குறிப்பிட்ட கட்சி அல்லது அரசாங்கத்தை அடிப்படையாகக் கொண்டிருக்காது என்றும் யார் ஆட்சியில் இருந்தாலும் சீனாவின் ஆதரவு இலங்கை மக்களுக்குத்தான் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சீனா கடந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் 2022 ஜனவரி மாதம் வரை 500 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மதிப்பிலான 730,000 மெட்ரிக் தொன் எரிபொருளை இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு வழங்கியுள்ளது.

இதற்காக, மொத்தம் 12 கப்பல்களுக்கான கட்டணமாக, 390 மில்லியன் டொலர்களை இலங்கை செலுத்த வேண்டியுள்ளது. இந்த நிலையில், அதில் 7 கப்பல்களுக்கு மாத்திரம் கட்டணம் செலுத்தப்பட்டுள்ளன.

இதேவேளை எந்தவொரு அரசாங்கத்தின் கீழும் சீனாவின் ஆதரவு தொடரும். சீனா, இலங்கை மக்களுக்கு தொடர்ந்து ஆதரவளிக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

காசா நகரை கைப்பற்ற இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல்!

காசாவின் நகரப் பகுதியை முழுமையாகக் கைப்பற்றும் பெஞ்சமின் நெதன்யாகுவின் திட்டத்திற்கு இஸ்ரேலிய...

நாட்டின் சில பகுதிகளில் அவ்வப்போது மழை

இன்றையதினம் (08) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு 10 மணிநேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை மறுதினம்  (09) நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக...