யாழ் வந்த அமெரிக்க தூதுவர் பல்வேறு தரப்பினருடனும் சந்திப்பு!

Date:

யாழ்ப்பாணத்துக்கு நேற்று (24) விஜயம் செய்த இலங்கைக்கான அமெரிக்க தூதர் ஜூலி சுங் சிவில் சமூக தலைவர்களை சந்தித்து கலந்துரையாடினார்.

நேற்று மாலை பலாலி சர்வதேச விமான நிலையம் ஊடாக யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்த அமெரிக்க தூதர், கொக்குவிலில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் தங்கியுள்ள நிலையில் குறித்த சந்திப்பு இடம்பெற்றது.

இலங்கைக்கான முன்னாள் அமெரிக்க தூதுவர் அலைனா டெப்லிஸ்ட் பின்னர் இங்கு இராஜதந்திர பணிகளை பொறுப்பேற்ற தூதுவர் ஜுலி சங் கொழும்பில் பல்வேறு சந்திப்புகளில் கலந்துக் கொண்டிருந்தார். இலங்கையில் கடமைகளை பொறுப்பேற்றதன் பின்னர் அவரது முதலாவது வெளி மாகாணத்திற்கான விஜயமாக வட மாகாணமாக அமைந்துள்ளது.

வட மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா, முன்னாள் வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்கிணேஷ்வரன் மற்றும் யாழ் ஆயர் உட்பட சிவில் சமூகத்தினரையும் சந்தித்து இதன் போது கலந்துரையாடினர். அதே போன்று யாழ். நூலகத்திற்கும் விஜயம் செய்ய உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

‘இஸ்லாமிய வாரிசுரிமைச் சட்டம்; விளக்கமும் இலங்கையில் அதன் நடைமுறையும்’ நூல் வெளியீடு இன்று மாலை BMICH இல்.

மிஷ்காத் ஆய்வு நிறுவனம் வெளியிடுகின்ற ''இஸ்லாமிய வாரிசுரிமைச் சட்டம்; விளக்கமும் இலங்கையில்...

6 ஆம் வகுப்பு ஆங்கில பாடத்திட்டம் 2027 க்கு ஒத்திவைக்கப்பட்டது!

தற்போதைய கல்வி சீர்திருத்த செயல்முறையின் 6 ஆம் வகுப்பு ஆங்கில தொகுதியை...

5ம் ஆண்டு புலமைப்பரிசில் மாணவர்களுக்கு அறிவித்தல்

2025 ஆம் ஆண்டின் தரம் 5 புலமைப் பரிசில் பெறுபேறுகளுக்கமைய பாடசாலைகளில்...

நாடு திரும்பும் அமெரிக்கத் தூதுவர் ஜூலி சாங் ஜனாதிபதியுடன் சந்திப்பு!

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவராக தனது இராஜதந்திர சேவையை நிறைவு செய்துவிட்டு, ஜனவரி...