ரமழான் பண்டிகையை முன்னிட்டு கட்டார் நாட்டில் பல்வேறு குற்றங்களுக்காக சிறை வைக்கப்பட்டிருக்கும் 20 இலங்கை கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
கட்டார் அரசாங்கத்தினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
விடுதலை செய்யப்பட்டுள்ள 20 இலங்கையர்களும் கட்டார் நாட்டில் கடமையாற்றும் போது பல்வேறு சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் சிறைத்தண்டனை பெற்றவர்களாவர்.
மேலும், சிறைத்தண்டனைக்கு மேலதிகமாக, நாட்டில் உள்ள நீதிமன்றங்களால் செலுத்தப்பட வேண்டிய நிதி அபராதங்களிலிருந்தும் அவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளதாக வேலைவாய்ப்பு பணியம் மேலும் தெரிவித்துள்ளது.
ரமழான் பண்டிகையை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கையை எடுத்ததற்காக கட்டார் அரசை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் பாராட்டு தெரிவித்துள்ளது.