யாழ்ப்பாணம் – கொடிகாமம் பகுதியில் ரயிலுடன் கெப் வாகனம் ஒன்று மோதி இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன், இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
யாழ் தேவி ரயிலில் மோதியே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
பாதுகாப்பற்ற முறையில் பயணித்த கெப் வாகனமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
தந்தை மற்றும் இரண்டு பிள்ளைகளே இந்த விபத்தில் சிக்கியுள்ளனர். விபத்து தொடர்பில் கொடிகாமம் பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.