விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ பதவி விலகினார்!

Date:

விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தனது அமைச்சுப் பதவிகளை இராஜினாமா செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

இவர் பாராளுமன்ற உறுப்பினர் இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராகவும், அபிவிருத்தி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு அமைச்சராகவும், டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் தொழில் முயற்சி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார்.

இன்று இரவு திடீரென கூட்டப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் ஆளும் கட்சியின் பெரும்பான்மையானோர் பங்கேற்றுளளனர். இதன்போதே இந்தத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்திற்கு எதிராக போராட்டங்கள் வலுப் பெற்ற பின்னணியிலேயேஇ நாமல் ராஜபக்ஷ இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Popular

More like this
Related

பாடசாலைகளில் முன்னெடுக்கப்படும் விழாக்களை எளிமையான நடத்துங்கள்: கல்வி அமைச்சு

பாடசாலைகளில் முன்னெடுக்கப்படும் பல்வேறு விழாக்கள் மற்றும் கொண்டாட்டங்களுக்கு முன்னைய அறிவுறுத்தல்களைப் புறக்கணித்து...

கொழும்பு பல்கலைக்கழகம் மற்றும் பாகிஸ்தான் இஸ்லாமிய பல்கலைக்கழகம் இடையே புதிய கல்விசார் ஒத்துழைப்பு

சர்வதேச ரீதியிலான கல்வித் தொடர்புகளை விரிவுபடுத்தும் நோக்கில், கொழும்பு பல்கலைக்கழகம்...

விடுமுறை காலச் சுற்றுலாக்களின் போது முஸ்லிம் சமூகம் பேண வேண்டிய ஒழுக்கக்கோவைகள்: உலமா சபை விசேட வழிகாட்டல்கள்

விடுமுறை காலங் களில் மேற்கொள்ளப் படும் சுற்றுலாக்கள் மற்றும் பயணங்களின் போது...

சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து இலங்கைக்கு 700 மில்லியன் டொலர்கள் நிதியுதவி!

நான்காண்டு கால நீட்டிக்கப்பட்ட நிதி வசதி (EFF) ஏற்பாட்டின் கீழ், ஐந்தாவது...