நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வரும் தொழிற்சங்கங்களின் போராட்டத்தில் இணைந்துள்ள ரயில் ஊழியர்களின் ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் சில ரயில்கள் இயக்கப்பட்டுள்ளன.
அதற்கமைய தொடரும் 24 மணித்தியால ரயில்வே தொழிற்சங்க நடவடிக்கையின் போது இன்று காலை 5 ரயில்கள் இயக்கப்பட்டதாக இலங்கை ரயில்வேயின் ஊடகப் பேச்சாளர் ஏ.டி.ஜி. செனவிரத்ன ஆங்கில ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவித்துள்ளார்.
கொழும்புக்கு வரும் பிரதான ரயில் பாதையில் மூன்று புகையிரதங்களும் மற்ற பாதைகளில் இரண்டும் இயங்குவதாக அவர் தெரிவித்தார்.
கோட்டை ரயில் நிலையத்திலிருந்து தினமும் 200இற்கும் மேற்பட்ட ரயில்கள் இந்தப் பாதையில் செல்கின்றன.
பெரும்பாலான அரச மற்றும் தனியார் பிற துறை ஊழியர்களின் வேலைநிறுத்தம் காரணமாக மாலையில் ரயில்கள் செல்வது குறித்து அவர் சந்தேகம் தெரிவித்தார்.
ரயில்வே ஊழியர்கள், குறிப்பாக இன்ஜின் ஓட்டுனர்கள்,வேலை நிறுத்தத்திலிருந்து, பணிக்கு வராமல், விலகி உள்ளனர். எனவே, பயணிகள் மாற்று போக்குவரத்து முறைகளை பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.