வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளவர்களின் பதிவை ரத்து செய்யுமாறு எரிசக்தி அமைச்சர் பணிப்புரை!

Date:

எரிபொருள் போக்குவரத்துக்காக புதிய விநியோகஸ்தர்களை உடனடியாக பதிவு செய்யுமாறு இலங்கை பெட்ரோலிய சேமிப்பு நிலையத்தின் லிமிடெட் நிறுவனத்திற்கு எரிசக்தி மற்றும் மின்சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர பணிப்புரை விடுத்துள்ளார்.

தனியார் எரிபொருள் தாங்கிகள் சங்கம் முன்னெடுத்த வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு பதிலளித்து எரிசக்தி அமைச்சர் டுவிட்டர் தளத்தில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

கடமைக்கு சமூகமளிக்கத் தவறும் விநியோகஸ்தர்களின் பதிவை ரத்து செய்யுமாறும் அமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளார்.

புகையிரத சேவைகள், அரசாங்கத்திற்கு சொந்தமான பௌசர்கள், பெற்றோல் நிலைய பௌசர்கள் மற்றும் எரிபொருள் போக்குவரத்திற்காக வேலைநிறுத்தம் செய்யாத தனியார் வாடகை பௌசர்களின் சேவைகள் தொடர்ந்தும் இயங்கும் என அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

மேலும் இன்றையதினம் (ஏப்ரல் 30) மாலை 4.00 மணியளவில் விநியோகத்திற்காக பயன்படுத்தப்பட்ட மொத்த பவுசர்களின் எண்ணிக்கை 381 எனவும் அவர் கூறினார்.

சூப்பர் டீசல், ஒக்டேன் 92 பெற்றோல் மற்றும் மண்ணெண்ணெய் என்பன மொத்தமாக எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு விடுவிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தனது டுவிட்டர் செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், ஒக்டேன் 95 பெற்றோலின் விநியோகம் மட்டுப்படுத்தப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Popular

More like this
Related

மண் மேடு சரிந்து புதையுண்ட 6 பேர்:மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி!

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ராணி தோட்டத்தில் இன்று...

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...