ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்திற்கு அருகில் பதற்ற நிலைமை

Date:

கொழும்பில் உள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்திற்கு முன்பாக முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் மத்தியில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன தலைமையகத்திற்கு வந்ததையடுத்து இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர், பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர, நிலைமையை கட்டுக்குள் கொண்டுவரும் முயற்சியில், ஆர்ப்பாட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது ஆர்ப்பாட்டக்காரர்கள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களுக்கு தமது வாக்குகளை காட்டிக் கொடுக்க வேண்டாம் எனவும், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள பொதுமக்களுக்கு ஆதரவாக செயற்படுமாறும் கேட்டுக்கொண்டனர்.

இதேவேளை, ஜனாதிபதியுடன் இன்று நடைபெறவுள்ள கலந்துரையாடலை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சுயேச்சைக் குழு புறக்கணிக்கவுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியுடன் நடைபெறவுள்ள கலந்துரையாடலை புறக்கணிக்க 11 அரசியல் கட்சிகளின் சுயேட்சை நாடாளுமன்ற உறுப்பினர்களும் தீர்மானித்துள்ளனர்.

இதேவேளை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சகல பதவிகளில் இருந்தும் சாந்த பண்டார நீக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

அதற்கமைய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்த பண்டார விவசாய இராஜாங்க அமைச்சராக நேற்று நியமிக்கப்பட்டதை அடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுடன் தமிழ்–முஸ்லிம் அரசியல் கட்சிகளின் முக்கிய சந்திப்பு!

தமிழ் மற்றும் முஸ்லிம் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதி அநுர குமார...

நுவரெலியா மாவட்டத்திலுள்ள அனைத்து அரசாங்க பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை!

தற்போது நிலவிவரும் சீரற்ற வானிலையைக் கருத்திற் கொண்டு நுவரெலியா மாவட்டத்திலுள்ள அனைத்து...

களனி கங்கை தாழ்நில மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

களனி கங்கைப் படுகைக்கு விடுக்கப்பட்டிருந்த வெள்ள அபாய எச்சரிக்கை அறிவித்தலை எதிர்வரும்...

மோசமான வானிலை: பேராதனைப் பல்கலைக்கழக மாணவர்களுக்கான சிறப்பு அறிவிப்பு!

நிலவிவரும் மோசமான வானிலை காரணமாக மகாவலி ஆற்றின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால்,...