2ஆவது தடவையாக பிரான்ஸ் ஜனாதிபதியாகும் மேக்ரான்: வலதுசாரி வேட்பாளருக்கு தோல்வி!

Date:

பிரான்ஸ் ஜனாதிபதி தேர்தலில் தீவிர வலதுசாரி ஆதரவாளரான மரைன் லு பென் 42 சதவீத வாக்குகள் பெற்று தோல்வியை தழுவினார்.

அதற்கமைய இமானுவேல் மேக்ரான் இரண்டாவது முறையாக ஜனாதிபதியாகிறார்.

பிரான்ஸ் பாராளுமன்ற தேர்தலின் முதல் கட்டம் கடந்த 10ஆம் திகதி நடைபெற்றது. இந்த தேர்தலில் அதிபர் பதவிக்கு போட்டியிடும் மேக்ரான் உட்பட மொத்தம் 12 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர்.

இமானுவல் மேக்ரானுக்கும், வலதுசாரி வேட்பாளரும், பெண் வக்கீலுமான மரைன் லு பென்னுக்கும் இடையே கடும் போட்டி நிலவியது.

இந்நிலையில், முதல் சுற்று தேர்தலில் எந்த வேட்பாளரும் பெரும்பான்மை வாக்குகளைப் பெறவில்லை.
இதனால் நேற்று நடந்த பிரான்ஸ் ஜனாதிபதி தேர்தலின் இரண்டாம் கட்டத்தில் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்றது.

இதன்போது, வாக்கு எண்ணிக்கையில் மேக்ரான் 58.2 சதவீதம் வாக்குகள் பெற்று மீண்டும் அதிபராக பதவியேற்கவுள்ளார்.

இந்நிலையில், இரண்டாவது முறை அதிபராக மீண்டும் தேர்வு செய்யப்பட்டதை அறிந்த இமானுவல் மேக்ரான், வாக்களித்த மக்களுக்கு நன்றி என தெரிவித்தார்.

மேலும், இரண்டாவது முறையாக பிரான்ஸ் ஜனாதிபதியாக வெற்றி பெற்றுள்ள இமானுவல் மேக்ரானுக்கு பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், இத்தாலி பிரதமர் மரியோ டிராகி, போர்ச்சுக்கல் பிரதமர் அண்டோனியோ கோஸ்டா உள்ளிட்ட பல்வேறு நாட்டுத் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இதேவேளை விலைவாசி உயர்வு, கொவிட் பரவல், கொவிட் கட்டுப்பாடுகளுக்கு எதிராக மக்கள் கிளர்ச்சி எனத் தொடர்ந்து பின்னடைவை மேக்ரான் சந்தித்து வந்தார். இந்நிலையில் அவர் இரண்டாவது முறையாக ஜனாதிபதி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் காரணமாக இலங்கை பொருளாதாரத்தில் ஏற்படக்கூடிய தாக்கம் குறித்து கலந்துரையாடல்

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போதைய போர்ச் சூழல் காரணமாக இலங்கையின் பொருளாதாரத்தில்...

புத்தளம் ஆதார வைத்தியசாலை மத்திய அரசாங்கத்தின் கீழ்:

தற்போது வடமேல் மாகாண சபையின் கீழ் இயங்கி வரும் புத்தளம் ஆதார...

ஐக்கிய அரபு அமீரக ஜனாதிபதியுடன் ஜனாதிபதி அநுர பேச்சு!

ஐக்கிய அரபு அமீரகம் அண்மையில் எதிர்கொண்ட தாக்குதல்கள் குறித்துத் தனது கவலையைத்...

இலங்கை கடற்பரப்பில் ஈரானிய கப்பல் மீதான தாக்குதலில் 100-க்கும் மேற்பட்டோர் மாயம்: ரெய்ட்டர்ஸ் தகவல்

இலங்கை கடற்கரையில் ஈரானிய கப்பலின் மீது சந்தேகத்திற்கிடமான நீர்மூழ்கிக் கப்பல் நடத்திய...