இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலையை அடுத்த வாரம் அதிகரிக்க பால் மா இறக்குமதி நிறுவனங்கள் தயாராகி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
டொலரின் மதிப்பு உயர்ந்ததே இதற்குக் காரணம் எனவும், அதற்கு ஏற்றாற் போன்று விலை அதிகரிப்பை செய்ய வேண்டியுள்ளதாக பால்மா இறக்குமதியாளர்கள் கூறுகின்றன.
அதன்படிஇ எதிர்காலத்தில் கையிருப்பு பால் மாவுக்கான விலை கணக்கிடப்பட்டு புதிய விலை அறிவிக்கப்படும்.
இதேவேளை தற்போது சந்தையில் ஒருகிலோ பால் மா கிலோ 1945 ரூபாவுக்குக்கும் 400 கிராம் பால்மா பக்கட் ஒன்று 800 ரூபாவுக்கும் விற்பனையாகின்றமை குறிப்பிடத்தக்கது.
சந்தையில் பால் மாவின் இருப்புக்கள் தீர்ந்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.