அநுர குமார திசாநாயக்க வன்முறைப் போராட்டங்களைத் தூண்டுகிறார்: பாராளுமன்றில் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ

Date:

மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) தலைவர் அனுரகுமார திஸாநாயக்க வன்முறைப் போராட்டங்களைத் தூண்டுவதாகக் கூறி அவர் மீது பாராளுமன்றத்தில் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.

அரசாங்க நாடாளுமன்ற உறுப்பினர்களால் அவர் மீது கடும் விமர்சனத்துக்குள்ளான நிலையில், பாராளுமன்றத்தில் கடும் விவாதங்கள் முன்வைக்கப்பட்டது.

நேற்றைய தினம் பாராளுமன்றத்தில் இருந்து வரும் வழியில் ஆர்ப்பாட்டக்காரர்களுடன் அனுரகுமார திஸாநாயக்க அரட்டை அடிப்பதையும் அவர்களுடன் உணர்வுகளை எதிரொலிப்பதையும் காணமுடிந்ததாக அரசாங்க பாராளுமன்ற உறுப்பினர்கள் கருத்து வெளியிட்டனர்.

அரசாங்கத்தின் பிரதம கொறடா ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ குறிப்பிடுகையில்,

‘எவருக்கும் எதிராக வன்முறை மற்றும் நாசவேலைகளை கட்டவிழ்த்துவிடுவதற்கு போராட்டக்காரர்களைத் தூண்டுவது ஜே.வி.பி தலைவருக்கு பொருத்தமற்றது என்று கூறினார்.

மேலும் 1988/ 1989 காலப்பகுதியில் ஜேவிபி தலைவர்கள் இதேபோன்ற கொலைக் கலாச்சாரத்தை தூண்டியதாக அவர் குற்றம்சாட்டினர்.

‘இன்று, நீங்கள் போராட்டக்காரர்களுடனான உரையாடலில் உங்கள் முகத்தை காண்பித்ததால், நீங்கள் தலைமறைவாக உள்ளீர்கள்’ என்றும் ஜோன்ஸடன் பெர்னாண்டோ சபையில் ஆவேசமாக கருத்து வெளியிட்டுள்ளார்.

Popular

More like this
Related

இன–மத எல்லைகளை தாண்டிய தன்னார்வ சேவை:சிவில் சமூக அமைப்புகள் இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி தலைமையகத்தில் சந்திப்பு!

கொழும்பு – இலங்கையில் அண்மையில் ஏற்பட்ட பாரிய இயற்கை அனர்த்தங்களின் பின்னணியில்,...

கொழும்பு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் திடீர் நீர்த்தடை

அம்பத்தலேயிலிருந்து தெஹிவளை வரை செல்லும் பிரதான நீர் விநியோகக் குழாயில் ஏற்பட்ட...

இராஜதந்திர நியமனங்களில் ஜித்தா ஏன் ஒரு விதிவிலக்காகிறது ?

ஜித்தாவுக்கான கொன்சல் ஜெனரல் நியமனம் தொடர்பில் முஸ்லிம் சமூகத்தில் பெரும் அதிருப்தி...

பாடசாலை மாணவர்களுக்கு 6,000 ரூபாய் உதவித்தொகை: வங்கிக் கணக்குகளில் வைப்பீடு

பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களை கொள்வனவு செய்வதற்கான 6,000 ரூபாய் உதவித்தொகை...