‘அரச அதிகாரிகள் மக்களது உணர்வுகளை மதித்து செயற்படவேண்டும்’ :ஜம்இய்யத்துல் உலமா சபை

Date:

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆழ்ந்த வருத்தத்தையும், கவலையையும் தெரிவித்துக் கொள்வதாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா தெரிவித்துள்ளது.

ரம்புக்கனை சம்பவம் தொடர்பாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

கடந்த 2022.04.19 ஆம் திகதி ரம்புக்கன பிரதேசத்தில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டுக்குப் பலியான சகோதரர் கே.டி. சமிந்த லக்ஷான் குடும்பத்தினருக்கு இந்த சந்தர்ப்பத்தில் ஆறுதலையும், ஆழ்ந்த கவலையையும் தெரிவித்துக் கொள்வதோடு, குறித்த சம்பவத்தின்போது காயமடைந்த ஏனையவர்களும் மிக விரைவில் குணமடைய வேண்டுமென்று பிரார்த்திக்கின்றது.

அத்துடன், அனைத்து விதமான வன்முறைகளையும் ஜம்இய்யா வன்மையாகக் கண்டிப்பதுடன் குறித்த சம்பவம் தொடர்பில் சுயாதீனமான மற்றும் வெளிப்படையானதொரு விசாரணை நடாத்தப்பட்டு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென்று அதிகாரிகளை கேட்டுக் கொள்கின்றது.

அனைத்து தரப்பினரும் வன்முறையைத் தவிர்த்து ஜனநாயக ரீதியில் தமது செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டுமென்றும், குறிப்பாக அதிகாரிகள் மக்களது உணர்வுகளை மதித்து அவர்களின் வேண்டுகோள்களை செவிமடுத்து உரிய தீர்வுகளை பெற்றுக் கொடுக்க வேண்டுமென்றும் ஜம்இய்யா கேட்டுக் கொள்கின்றது.

அத்தியவசியப் பொருட்களின் விலை உயர்வு, எரிபொருள் பற்றாக்குறை போன்றவற்றின் காரணமாக நம்நாட்டு மக்கள் பல நெருக்கடிகளை எதிர்கொண்டு வருவதோடு, அதன் விளைவாக மக்கள் தமது தேவைகளையும், ஆதங்கங்களையும் முன்வைத்து ஜனநாயக ரீதியில் பல ஆர்ப்பாட்டங்களிலும் எதிர்ப்பு நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

நாட்டு மக்கள் எதிர்நோக்கக்கூடிய பிரச்சினைகள் விரைவில் நீங்கி ஒரு சுமுகமான நிலைமை நம் நாட்டில் உருவாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா பிரார்த்திப்பதாகவும் குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில் 2000 முறைப்பாடுகள்

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில்...

நாட்டின் சில பகுதிகளில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்

சப்ரகமுவ மற்றும் மேல்  மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா,காலி மற்றும்...

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...

தொடர்ந்தும் தலைமறைவானால் ராஜிதவின் சொத்துக்கள் பறிமுதலாகும்: இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுஆணைக்குழு

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தொடர்ந்தும் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவானால் அவரது...