பேருந்துகளுக்கான உதிரிபாகங்கள் இல்லாத காரணத்தினால் பேருந்துகளை இயக்க முடியாது என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன இன்று கொழும்பில் தெரிவித்தார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
பேருந்துளின் டயர்கள், பேட்டரிகள், பின் லைனர்கள் உள்ளிட்ட உதிரி பாகங்கள் இல்லாததால் அதிக எண்ணிக்கையிலான பேருந்துகள் சேவையில் இருந்து நிறுத்தப்பட்டுள்ளதாக விஜேரத்ன மேலும் தெரிவித்தார்.