கொழும்பில் மக்கள் போராட்டத்தில் இணைந்தார் பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை !

Date:

இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு எதிராக ஜனாதிபதி மற்றும் அவரது அரசாங்கத்திற்கு எதிராக பொதுமக்கள் நடத்திய அமைதியான போராட்டங்களில் கொழும்பு பேராயர் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை இணைந்து கொண்டுள்ளார்.

இந்த போராட்டத்தின் போது, மெல்கம் கர்தினால் ரஞ்சித் பல பாதிரியார்கள், கன்னியாஸ்திரிகள் மற்றும் கிறிஸ்தவ அமைப்புகள் இணைந்துள்ளனர்.

இன்று முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்ட பேரணியின் போது ஆர்ப்பாட்டக்காரர்கள் பதாகைகளையும் இலங்கையின் தேசியக் கொடியையும் ஏந்தியவாறு காணப்பட்டனர்.

தற்போதைய நெருக்கடி நிலையில், நாடு முழுவதும் மக்கள் திரண்டு போராட்டங்களை ஆரம்பித்துள்ளனர். அரசாங்கம் பதவி விலகும் வரை போராட்டத்தை கைவிடுவதில்லை என்று பொது மக்கள் பல பிரதேசங்களில் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

இன்று முன்னெடுக்கப்பட்ட இந்த போராட்டத்தில் ஆர்ப்பாட்டக்காரர்கள் பதாகைகளையும் தேசியக் கொடியையும் ஏந்தி ஈடுபட்டிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

Popular

More like this
Related

ஐ.நா. பொதுச் சபையில் ஜனாதிபதியின் உரைக்கு தேசிய சூறா சபையின் பாராட்டு

2025 செப்டம்பர் 24 அன்று ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையின்...

மாணவனால் தாக்கப்பட்ட ஆசிரியர் வைத்தியசாலையில் அனுமதி!

மொனராகலையில் உள்ள அரச பாடசாலையொன்றின் மாணவர் ஒருவரால் தாக்கப்பட்டதில் ஆசிரியர் சிறு...

வாகன இறக்குமதிக்காக ஒரு பில்லியன் டொலர் செலவு!

வாகன இறக்குமதிக்கான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதன் மூலம், 2025 ஜனவரி முதல் ஆகஸ்ட்...

ஜப்பானுக்கான விஜயத்தை நிறைவு செய்து நாடு திரும்பினார் ஜனாதிபதி!

ஜப்பானிய அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் ஜப்பானுக்கான மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை...