சீமெந்து விலை மீண்டும் அதிகரிப்பு!

Date:

இறக்குமதி செய்யப்படும் சீமெந்தின் விலை  (ஏப்ரல் 25) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் 50 கிலோகிராம் மூடை ஒன்றின் விலை 500 ரூபாவினால் அதிகரிக்கப்படும் என சீமெந்து நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
அதன்படி, 50 கிலோ எடையுள்ள சீமெந்து மூடை ஒன்றின் புதிய விலை ரூ.2,850 ஆக அதிகரிக்கப்படவுள்ளது.
இந்த வருடத்தில் இதுவரை நான்காவது முறையாக சீமெந்தின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜனவரி 01 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் உள்ளுர் சீமெந்தின் விலையை 100 ரூபாவினால் அதிகரிக்க உள்ளூர் சீமெந்து நிறுவனங்கள் தீர்மானித்திருந்தன.
அதேபோல்,கடந்த மார்ச் மாதம் 13ஆம் திகதி 50 கிலோ கிராம் சீமெந்து மூடையின் விலை 350 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டிருந்த நிலையில், ஏப்ரல் 01ஆம் திகதி உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் மற்றும் இறக்குமதி செய்யப்படும் சீமெந்தின் விலை 50 கிலோகிராம் மூடைக்கு 500 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் மழை

ஊவா, சப்ரகமுவ மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை, நுவரெலியா மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் பிற்பகல்...

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் காரணமாக இலங்கை பொருளாதாரத்தில் ஏற்படக்கூடிய தாக்கம் குறித்து கலந்துரையாடல்

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போதைய போர்ச் சூழல் காரணமாக இலங்கையின் பொருளாதாரத்தில்...

புத்தளம் ஆதார வைத்தியசாலை மத்திய அரசாங்கத்தின் கீழ்:

தற்போது வடமேல் மாகாண சபையின் கீழ் இயங்கி வரும் புத்தளம் ஆதார...

ஐக்கிய அரபு அமீரக ஜனாதிபதியுடன் ஜனாதிபதி அநுர பேச்சு!

ஐக்கிய அரபு அமீரகம் அண்மையில் எதிர்கொண்ட தாக்குதல்கள் குறித்துத் தனது கவலையைத்...