நாடு முழுவதும் தொழிற்சங்கங்களின் வேலைநிறுத்தப் போராட்டம்!

Date:

நாடு முழுவதும் இடம்பெற்றுவரும் தொடர் போராட்டங்களுக்கு மத்தியில் ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கத்தை இராஜினாமா செய்யுமாறு கோரி அரச, மற்றும் தனியார் துறைகளின் தொழிற்சங்கங்கள் இன்று நாடளாவிய ரீதியில் வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளன.

அதற்கமைய முதலீட்டுச் சபை வலயத்துடன் இணைந்த ஊழியர்கள் குழு தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதுடன் ஆர்ப்பாட்டம் காரணமாக கட்டுநாயக்க அவெரிவத்தை பகுதியில் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதேநேரம், பல தொழிற்சங்கங்களின் தொடர்ச்சியான வேலைநிறுத்தப் போராட்டம் காரணமாக பல ரயில்வே தொழிற்சங்கங்களின் ஊழியர்களும் இன்று பணிக்கு சமூகமளிக்கவில்லை.

இன்று குறைந்த எண்ணிக்கையிலான ரயில்கள் சேவையில் ஈடுபட்டுள்ளதால் மாற்றுப் போக்குவரத்தைப் பயன்படுத்துமாறு புகையிரத திணைக்களம் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளதையடுத்து ரயில் சேவைகள் தடைப்பட்டுள்ளன.

இதேவேளை, கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் செயற்பாடுகள் வழமை போன்று இடம்பெறுவதாக விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் தெரிவித்துள்ளது.

வழமைப் போன்று செயற்பாடுகள் இடம்பெறுவதாக இலங்கை துறைமுக அதிகாரசபை தெரிவித்துள்ளது.

இதேவேளை துறைமுகம், புகையிரதம், சில சுகாதார சேவை சங்கங்கள், ஆசிரியர்கள், அதிபர்கள் மற்றும் வர்த்தக சமூகத்தினர் தங்களது ஆதரவை தெரிவித்துள்ளன.

இதற்கமைய ஆசிரிய அதிபர் தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளதுடன் நாடு முழுவதுமுள்ள அனைத்து பொருளாதார மத்திய நிலையங்களுக்கும், மரக்கறி விநியோகம் இடம்பெறமாட்டாது என அகில இலங்கை ஒன்றிணைந்த பொருளாதார மத்திய நிலைய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

கல்வி, போக்குவரத்து, தோட்டங்கள், துறைமுகங்கள், மின்சாரம், வங்கிகள், தபால் சேவைகள், சமுர்த்தி, அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், தொழிலாளர்கள் உட்பட சகல துறைகளிலும் உள்ள மக்கள் இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Popular

More like this
Related

நாமல் உலமா சபைக்கு விஜயம்: ஜனாஸா எரிப்பு உள்ளிட்ட முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளை சுட்டிக் காட்டிய ACJU

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான  நாமல் ராஜபக்ச,...

நவீன சவால்களுக்கு மத்தியில் இளைஞர்கள்: ஓர் இஸ்லாமிய கண்ணோட்டம்!

-(மௌலவி M.I. அன்வர் (ஸலபி)  (நன்றி: நவயுகம் இணையத்தளம்) ஆகஸ்ட் 12 ஆம் திகதி...

பிரியந்த வீரசூரியவை பொலிஸ் மா அதிபராக நியமிக்க அரசியலமைப்பு பேரவை அங்கீகாரம்!

நாட்டின் 37ஆவது பொலிஸ்மா அதிபராக பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த...