பாராளுமன்றத்திற்குள் சற்று முன்னர் பதற்றமான சூழ்நிலை நிலவியதை அடுத்து பாராளுமன்ற அமர்வுகள் பத்து நிமிடங்களுக்கு இடைநிறுத்தப்பட்டன.
அண்மையில் இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார தனது வீட்டுக்கு எதிரே இடம்பெற்ற போராட்டம் தொடர்பில் கருத்து வெளியிடும் போது பதற்றமான சூழல் உச்சக் கட்டத்தை எட்டியுள்ளது.
குறித்த இராஜாங்க அமைச்சரைக் கண்டித்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கூச்சல் போட்டதையடுத்து சபாநாயகர் அவையை இடைநிறுத்தினார்.