பதவியிலிருந்து விலகியது ஏன்? நாமல் விளக்கம்!

Date:

அரசுக்கு எதிரான மக்களின் போராட்டத்துக்குத் தலைவணங்கி அமைச்சுப் பதவியைத் துறந்துள்ளேன் என இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் பதவியை இராஜினாமா செய்துள்ளேன் என்று நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது- நாடு என்றுமில்லாத பொருளாதார நெருக்கடியைச் சந்த்தித்துள்ளது. இன்னமும் உரிய தீர்வு காணப்படவில்லை. இதற்கு ஜனாதிபதி தலைமையிலான அமைச்சரவை தான் பொறுப்புக்கூற வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

பொருளாதார நெருக்கடியால் மக்கள் மிகவும் கொதிப்படைந்துள்ளனர். அரசுக்கு எதிராக வீதிகளில் இறங்கி அவர்கள் போராடி வருகின்றனர். இந்நிலையில் மக்களின் போராட்டத்துக்குத் தலைவணங்கியும் , புதிய அமைச்சரவையை நியமிக்குமாறு வலியுறுத்தியும் அமைச்சுப் பதவியைத் துறந்துள்ளேன்.

புதிய அமைச்சரவை தொடர்பிலும், பொருளாதார நெருக்கடிக்கான தீர்வு குறித்தும் ஜனாதிபதியும் பிரதமரும் இணைந்து உரிய நடவடிக்கைகளை எடுப்பார்கள் என்று நம்புகின்றேன்” என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

ஹஜ் 2026: இலங்கை யாத்திரிகர்களின் நலன்களை ஆராய சவூதி சென்றடைந்தார் பிரதி அமைச்சர் முனீர் முலப்பர்!

இலங்கையின் முஸ்லிம் சமய, பண்பாட்டலுவல்கள் பிரதி அமைச்சரும், ஹஜ் தூதுவருமான கௌரவ...

தமிழ்நாடு சட்டமன்ற சபாநாயகருடன் H. அப்துர் ரகீப் அவர்கள் நேரில் சந்திப்பு: இஸ்லாமிய நூல்கள் அன்பளிப்பு!

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் அமைப்பின் முன்னாள் மாநிலத் தலைவரும், தற்போதைய மத்திய...

மூளைக்காய்ச்சல் குறித்து பொதுமக்களை அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை

தெனியாய பகுதியில் உள்ள சில பாடசாலைகளில் பதிவாகியிருந்த மூளைக்காய்ச்சல் நோய், தற்போது...

வெசாக் பண்டிகையை முன்னிட்டு தன்சல் வழங்குவோருக்கான அறிவிப்பு!

எதிர்வரும் வெசாக் பௌர்ணமி பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் நடத்துவதற்காக இதுவரையில்...