PSTA சட்டமூலம் தொடர்பான உயர் நீதிமன்றின் தீர்மானம் சபாநாயகரிடம் ஒப்படைப்பு!
‘பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாப்பதற்கான சட்டமூலம்’ (PSTA Bill) தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான உயர் நீதிமன்றத்தின் தீர்மானம், நாடாளுமன்ற சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்ரமரத்னவிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் அலுவலகம் இன்று (10) உறுதிப்படுத்தியது.
முன்மொழியப்பட்ட சட்டமூலத்தை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணையை உயர் நீதிமன்றம் 2026 நவம்பர் 4 அன்று தொடங்கியது.
பிரதம நீதிபதி பிரீத்தி பத்மன் சுரசேன மற்றும் நீதிபதிகள் அச்சல வெங்காப்புலி, சம்பத் அபேய்கூன் ஆகியோர் அடங்கிய மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு இந்த மனுக்களை விசாரித்தது.
முன்மொழியப்பட்ட சட்டத்தை எதிர்த்து மொத்தம் 26 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த சட்டமூலத்தின் சில பிரிவுகள் அரசியலமைப்பின் கீழ் உறுதி செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளை மீறுவதாக மனுதாரர்கள் வாதிட்டனர்.
இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் (BASL) உட்பட பல்வேறு தரப்பினர் இந்த மனுக்களைத் தாக்கல் செய்திருந்தனர்.
இந்த சட்டமூலம் அரசியலமைப்பிற்கு முரணானது என்ற அடிப்படையில், அது குறித்த மனுக்களின் மீதான விசாரணையை உயர் நீதிமன்றம் நேற்று (09) இரண்டாம் நாளாகத் தொடர்ந்தது.
நேற்று விசாரணை நிறைவடைந்த நிலையில், இந்த சட்டமூலத்தின் அரசியலமைப்புச் செல்லுபடித் தன்மை குறித்த தனது இரகசியத் தீர்மானத்தை, நாடாளுமன்ற சபாநாயகருக்கும் ஜனாதிபதிக்கும் அறிவிக்கப்போவதாக உயர் நீதிமன்றம் தெரிவித்தது.