புதிய பிரதமரின் கீழ் சர்வகட்சி இடைக்கால அரசாங்கம் அமைக்க ஜனாதிபதி இணக்கம்!

Date:

புதிய பிரதமரின் கீழ் சர்வகட்சி இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இணக்கம் தெரிவித்துள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இன்று இடம்பெற்ற அரசாங்கத்தின் 11 சுயேட்சைக் கட்சிகளுடனான சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

புதிய பிரதமர் மற்றும் புதிய அமைச்சரவையின் கீழ் அனைத்து கட்சிகளையும் உள்ளடக்கி இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கு ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இந்த விடயம் தொடர்பில் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஏனைய அரசியல் கட்சிகளுடன் கலந்துரையாடுவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் வீரசுமன வீரசிங்க தெரிவித்துள்ளார்.

இந்த சந்திப்பின் போது அனைத்துக் கட்சி இடைக்கால அரசாங்கத்தை அமைப்பது தொடர்பில் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஏனைய அரசியல் கட்சிகளுடன் கலந்துரையாடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உட்பட அரசாங்கத்தின் 11 சுயேட்சைக் கட்சிகள் அண்மையில் அரசாங்கத்தில் இருந்து விலகி, இலங்கையில் தற்போது நிலவும் தேசிய நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கு சர்வகட்சி இடைக்கால அரசாங்கம் அமைக்கப்படும் வரை பாராளுமன்றத்தில் சுயாதீனமாக இருக்க தீர்மானித்திருந்தன.

சர்வகட்சி இடைக்கால அரசாங்கத்தை அமைப்பது தொடர்பில் ஆலோசிப்பதற்காக அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று அழைப்பு விடுத்திருந்தார்.

Popular

More like this
Related

முஸ்லிம் சமய திணைக்களத்தின் ஏற்பாட்டில், திருகோணமலை பள்ளிவாசல்களின் நம்பிக்கையாளர்களுக்கான செயலமர்வு

திருகோணமலை மாவட்ட பள்ளிவாசல்களின் நம்பிக்கையாளர்களுக்கான ஏற்பாடு செய்யப்பட்ட செயலமர்வு முஸ்லிம் சமய...

பேருந்துகளில் விபத்துகளை குறைக்க AI கேமராக்கள் பொருத்த திட்டம்!

நீண்ட தூர பேருந்துகளில் ஏற்படும் விபத்துகளைக் குறைக்கும் நோக்கில் ஒரு புதிய...

நாமல் உலமா சபைக்கு விஜயம்: ஜனாஸா எரிப்பு உள்ளிட்ட முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளை சுட்டிக் காட்டிய ACJU

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான  நாமல் ராஜபக்ச,...