ரம்புக்கனை துப்பாக்கிச் சூடு:’சம்பந்தப்பட்ட பொலிஸாரை கைது செய்வதற்கான நீதிமன்ற உத்தரவு இன்னும் கிடைக்கவில்லை’

Date:

ரம்புக்கனை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸ் அதிகாரிகளை கைது செய்வதற்கான நீதிமன்ற உத்தரவு இன்னும் பொலிஸ் மா அதிபர் (ஐபுP) பெறவில்லை என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவா, நீதிமன்ற உத்தரவு கிடைத்ததும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

புதன்கிழமை (ஏப்ரல் 27), ரம்புக்கனையில் இடம்பெற்ற போராட்டத்தின் போதும் துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்புடைய அனைத்து பொலிஸ் அதிகாரிகளையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கேகாலை நீதவான் நீதிமன்றம் பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவிட்டது.

இந்த வழக்கு மூன்றாவது நாளாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே கேகாலை நீதவான் வாசன நவரத்ன இந்த உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதன்படி, ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவிட்ட பொலிஸ் உத்தியோகத்தர்களையும், ரம்புக்கனையில் அண்மையில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது துப்பாக்கிச் சூடு நடத்திய அதிகாரிகளையும் கைது செய்யுமாறு நீதவான் உத்தரவிட்டார்.

கடந்த ஏப்ரல் 19 அன்று, பழைய விலையில் எரிபொருளை வழங்குமாறு கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த ஒரு குழுவினர், ரம்புக்கனை நகருக்குள் நுழையும் மற்றும் வெளியேறும் அனைத்து வீதிகளையும், 15 மணி நேரத்திற்கும் மேலாக அடைத்தனர்.

இதனால் மெயின் லைனில் வாகன போக்குவரத்து மற்றும் ரயில் போக்குவரத்து தடைபட்டது.
இதற்கிடையில் குறித்த பகுதியில், அருகே பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டதால், போராட்டக்காரர்களை கலைக்க பொலிஸார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர்.

பின்னர், நிலைமை மோசமடைந்ததால், பொலிஸார் அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில் ஒருவர் கொல்லப்பட்டார்.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து 15 காவல்துறை அதிகாரிகள் உட்பட மொத்தம் 29 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்,

காயமடைந்த போராட்டக்காரர்களில் ஒருவர் சிறிது நேரத்திலேயே உயிரிழந்தார். 42 வயதான சமிந்த லக்ஷன் என்பவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார் என்பது பின்னர் உறுதிப்படுத்தப்பட்டது.

சம்பவம் தொடர்பான வழக்கு கேகாலை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, எரிபொருள் பவுசருக்கு தீ வைக்க முயற்சித்த ஆர்ப்பாட்டக்காரர்களின் முழங்காலுக்கு கீழே துப்பாக்கிச் சூடு நடத்துமாறு கேகாலைக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் உத்தரவிட்டார்.

இந்நிலையில், போராட்டக்காரர்கள் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு தீ வைக்க முயன்றபோது, முதலில் பொலிஸாரை வானத்தை நோக்கி சுடுமாறும், பின்னர் எரிபொருள் பவுசருக்கு தீ வைக்க முயற்சித்ததால் பெரும் சேதத்தைத் தடுக்க முழங்காலுக்குக் கீழே சுடுமாறும் அவர் கட்டளையிட்டார்.

இச்சம்பவத்தைத் தொடர்ந்து, இச்சம்பவம் குறித்து பாரபட்சமற்ற, விரிவான விசாரணை நடத்துமாறு சி.ஐ.டி.க்கு இன்ஸ்பெக்டர் ஜெனரல் ஆஃப் போலீஸ் உத்தரவிட்டார். இதன் மூலம் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 125வது பிரிவின்படி விசாரணைகளை ஊஐனு பொறுப்பேற்றது.

Popular

More like this
Related

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும்,“அபுநானா நாடகப்புகழ்” கலைஞா் எம்.எம்.ஏ. லத்தீப் காலமானாா்.

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும், தொலைக்காட்சி “அபுநானா நாடகப்புகழ்” மற்றும் முஸ்லிம்...

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவன் தற்கொலை!

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் இறுதியாண்டு பயின்று வந்த மருத்துவ மாணவர்...

தேசபந்துவை பதவி நீக்கும் யோசனை நிறைவேற்றம்: ஆதரவாக 177 வாக்குகள்

தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபர் பதவியில் இருந்து நீக்குவதற்கான பிரேரணை...

எல்லை நிர்ணயத்துக்கு புதிய குழுவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்

எல்லை மீள் நிர்ணயத்துக்கென புதிய குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க...