அட்டுளுகம சிறுமி மரணம்: குற்றப்புலனாய்வு பிரிவினரின் விசாரணைகள் ஆரம்பம்

Date:

அட்டுளுகம பிரதேசத்தைச் சேர்ந்த ஆயிஷா என்ற 09 வயது சிறுமியின் மரணம் தொடர்பாக உண்மையை கண்டறியும் விசாரணைகள் இடம்பெறுவதாக பண்டாரகம பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ‘நியூஸ் நவ்’ செய்தி தளத்துக்கு தெரிவித்தார்.

எவ்வாறாயினும், குறித்த சிறுமியின் பிரதேச பரிசோதனைகளின் இறுதி முடிவின் படியே விசாரணைகளை தொடர்ந்து முன்னெடுக்கவுள்ளதாகவும், அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், சம்பவம் தொடர்பில் ஏற்கனவே சிறுமியின் தந்தையும் கோழியிறைச்சி விற்பனை உரிமையாளரிடமும் விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாகவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

இதேவேளை அட்டுளுகம பிரதேசத்தைச் சேர்ந்த ஆயிஷா தொடர்பான விசாரணைகள் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அறிவித்துள்ளார்.

வெள்ளிக்கிழமை காணாமல் போன ஒன்பது வயது சிறுமியின் சடலம் நேற்று அட்டுளுகம பிரதேசத்தில் உள்ள அவரது வீட்டின் பின்புறமுள்ள சதுப்பு நிலப்பகுதியில் இருந்து கண்டெடுக்கப்பட்டது.

அட்டுளுகம பிரதேசத்தை சேர்ந்த அப்பாவி சிறுமியை கொலை செய்த சந்தேக நபர்களை கைது செய்ய துரித நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உறுதியளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

மாகாண சபைத் தேர்தல் நடவடிக்கைகளை மேற்கொள்ள விசேட குழு!

மாகாண சபைத் தேர்தலை நடத்துவது தொடர்பான சட்ட நிலைமையை மீளாய்வு செய்து,...

புதிய தொல்பொருள் ஆலோசனைக் குழுவின் உறுப்பினராக பேராசிரியர் பி.ஏ. ஹுசைன்மியா நியமனம்!

மலாய், தென் ஆசிய மற்றும் தென்கிழக்காசிய ஆய்வுகளில் சர்வதேச ரீதியாக அறியப்படும்...

பல்வேறு நோய்களுக்கான 350 வகையான மருந்துகளின் விலை குறைப்பு

பல்வேறு நோய்களுக்கான 350 வகையான மருந்துகளின் விலைகளின் குறைக்கப்பட்டுள்ளதாக தேசிய ஒளடத...

வெலிமடை மத்ரஸா மாணவன் மரணம்: நீதி கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்.

வெலிமடைப் பகுதியில் 12 வயதுடைய சிறுவன் ஒருவர் சந்தேகத்துக்கிடமான  நிலையில் மரணமடைந்ததை...