அட்டுளுகம பிரதேசத்தில் காணாமல் போன 9 வயது சிறுமி சடலமாக மீட்பு!

Date:

பண்டாரகம, அட்டுளுகம பிரதேசத்தில் காணாமல் போனதாக கூறப்படும் 9 வயது சிறுமியின் சடலம் அவரது வீட்டிற்கு அருகிலுள்ள சதுப்பு நிலத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

வீட்டில் இருந்து சுமார் 150 மீற்றர் தூரத்தில் சிசிடிவி கேமராக்கள் இல்லாத நிலையில் சிறுமி சம்பவத்தை எதிர்கொள்ள நேரிட்டதாக பொலிஸ் குழுக்களின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

அட்டுளுகம பள்ளிவாசலுக்கு முன்பாக வசிக்கும் அல்கஸ்ஸாலி வித்தியாலயத்தைச் சேர்ந்த 9 வயதுடைய பாத்திமா ஆயிஷாவின் சடலமே இவ்வாறு கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் வேறு இடத்தில் கொலை செய்யப்பட்டு, கண்டுபிடிக்கப்பட்ட இடத்திற்கு கொண்டு வரப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

எவ்வாறாயினும் குறித்த சிறுமியின் மரணம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

நேற்று (27) காலை 10:00 மணியளவில் தனது வீட்டிற்கு அருகிலுள்ள கடைக்கு சென்ற சிறுமி காணாமல் போனதாகக் கூறப்பட்டதை அடுத்து, சிறுமியை தேடும் பணியில் நான்கு பொலிஸ் குழுக்களை நியமிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...

பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை

இன்றையதினம் (09) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...