அத்தியாவசிய பொருட்கள் தொடர்பான உண்மை நிலைமை குறித்து, திங்களன்று பிரதமர் மக்களுக்கு கூறுவார்!

Date:

விடுமுறை நாட்களைப் பற்றி சிந்திக்காமல் தொடர்ந்தும் பணியாற்ற தயாராக இருக்குமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று (13) பிரதமரின் அலுவலன ஊழியர்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

இதன்படி, எதிர்வரும் வெசாக் போயா தினத்தை உள்ளடக்கிய விடுமுறை வார இறுதியானது, பிரதமர் அலுவலகத்தில் தொடர்ச்சியான வேலை வாரமாக இருக்கும் என பிரதமர் தெரிவித்தார்.

இதேவேளை, எரிபொருள், மின்சாரம், எரிவாயு, உணவுப் பொருட்கள், உரங்கள் மற்றும் மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகள் மற்றும் பொருட்கள் தொடர்பான நாட்டின் உண்மையான நிலைமை குறித்த அறிக்கை எதிர்வரும் திங்கட்கிழமை (16) பொதுமக்களுக்கு வெளியிடப்படும் என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், தீர்வுகளை வழங்குவதற்கு முன்னர் மக்கள் உண்மையைக் கூறத் தொடங்குவதே பொருத்தமானது என பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

அதற்கமைய மருந்து தட்டுப்பாடு தொடர்பான தகவல்களை ருவான் விஜேவர்தனவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

நாட்டில் நிலவும் உரத் தட்டுப்பாடு குறித்து அகில விராஜ் காரியவசம், பெற்றோலிய நெருக்கடி குறித்து சாகல ரத்நாயக்க அறிக்கையிடவுள்ளார்.

பொதுமக்களுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்களை தட்டுப்பாடு இன்றி வழங்கும் குழுவில் வஜிர அபேவர்தன மற்றும் பாலித ரங்கே பண்டார ஆகியோர் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.

இந்தக் குழு அனைத்து பங்குதாரர்களையும் சந்தித்து உண்மையான பிரச்சினைகளைக் கண்டறிந்து அவர்களின் முன்மொழிவுகளைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Popular

More like this
Related

பிரபல ஊடகவியலாளர் இக்பால் அதாஸ் மரணம்.

பிரபல ஊடகவியலாளர் இக்பால் அதாஸ் இயற்கை எய்தியுள்ளார். 81 வயதான அவர்...

நாட்டின் சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழை

இன்றையதினம் (12) நாட்டின் வடக்கு, கிழக்கு, வடமத்திய, ஊவா, மத்திய மாகாணங்களில்...

விமல் வீரவங்சவின் போராட்டம்: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச உள்ளிட்ட சிவில் அமைப்புகளின்...

சீன உதவியை விரிவாக்க கோரிக்கை: அமைச்சர் விஜித ஹேரத் சீன வெளியுறவு அமைச்சருடன் சந்திப்பு.

தென்னாப்பிரிக்காவிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக்கொண்டு சீனா திரும்பும் வழியில், இன்று காலை...