அல்ஜஸீரா ஊடகவியலாளர் ஷிரீன் அபு அக்லே கொல்லப்பட்டதற்கு இரங்கல் தெரிவிக்கும் முகமாக முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் பலஸ்தீன தூதரகத்தில் இரங்கல் புத்தகத்தில் கையெழுத்திட்டார்.
இன்று பாலஸ்தீன தூதரகத்திற்குச் சென்று, மிகவும் மரியாதைக்குரிய ஒரு பத்திரிகையாளரின் கொடூரமான கொலையின் சீற்றத்தையும் பாலஸ்தீன தூதரக அதிகாரிகளுடன் அதிர்ச்சியையும் பகிர்ந்துகொண்டார்.
இதேவேளை சியோனிச ஆட்சிகள் பாலஸ்தீனத்தின் ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசங்களில் தங்கள் அட்டூழியங்களைத் தொடர்ந்துள்ளன.
ஷிரீன் அபு அக்லே போன்ற துணிச்சலான பத்திரிகையாளர்கள் தான் ஆக்கிரமிப்பின் உண்மைகளை உலகுக்கு அம்பலப்படுத்தினார்.
எல்லாம் வல்ல இறைவன் அவரது பாவங்களை மன்னித்து தியாகியாக (ஷாஹீத்) ஏற்றுக்கொள்வானாக எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஷிரீன் பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் அத்துமீறலை தகவல்களை உலக நாடுகளுக்கு கொண்டு சென்றததுடன் பாலஸ்தீன அகதிகள் முகாமில் இஸ்ரேல் இராணுவ வீரர்களின் தேடுதல் வேட்டை குறித்து செய்தி சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, சுட்டுக்கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.