விமான சேவை பயன்பாட்டுக்கான எரிபொருள் இறக்குமதி செய்யப்படாததால் எதிர்வரும் மே 31 ஆம் திகதி பிறகு விமான நிலையங்கள் மூடப்பட வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படும் செய்திகள் முற்றிலும் தவறானவை என விமான நிலைய கடமை அதிகாரி தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பாக ஆங்கில ஊடகமொன்று கருத்த தெரிவித்த அவர் அதிகாரப்பூர்வமாக அனைத்து செய்திகளையும் மறுத்துள்ளார் எனவும் அவை தவறானவை என்று கூறினார்.
எரிபொருள் நெருக்கடி காரணமாக இலங்கையில் தரையிறக்கப்பட்ட பல விமானங்கள் எரிபொருள் நிரப்புவதற்காக ஏற்கனவே சென்னைக்கு திரும்பியுள்ளதாக அதிகாரி தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், ஜெட் ஏ1 எரிபொருள் உண்மையில் இறக்குமதி செய்யப்பட்டது என்றும் மூன்றாம் தரப்பினரும் ஜெட் எரிபொருளை இறக்குமதி செய்வதில் ஈடுபட்டுள்ளனர் என்றும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபன ஆதாரங்கள் வெளிப்படுத்தின.
இதேவேளை இலங்கையில் கட்டுநாயக்க விமான நிலையம் உட்பட அனைத்து விமான நிலையங்களும் மூடப்படும் அபாயம் காணப்படுவதாகவும் எரிபொருள் நெருக்கடி இலங்கையை உலகத்திலிருந்து விலக்கி வைப்பதாக தெரிவித்து குறித்த செய்திகள் சமூக ஊடகங்களில் வெளியாகின.