இன்று நண்பகல் 12.00 மணிக்குப் பின்னர் பஸ் கட்டணத்தை அதிகரிக்க உள்ளதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அதற்கமைய விலை அதிகரிப்பு, தற்போது ரூ.5 ஆக இருக்கும் குறைந்தபட்ச பஸ் கட்டணத்தையும் பாதிக்கும் என பஸ் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
டீசல் விலையும் ரூ.111 உயர்த்தப்பட்டதால் அது நேரடியாக பஸ் சேவையை பாதிக்கும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எவ்வாறாயினும், க.பொ.த. சாதாரணதர பரீட்சைக்கு தோற்றவுள்ள பாடசாலை மாணவர்களின் வசதிக்காக நண்பகல் 12.00 மணி வரை பொது போக்குவரத்தில் ஈடுபடுமாறு பஸ் உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை எரிபொருள் விலை அதிகரிப்புடன் ஒப்பிடும் போது பஸ் சேவைகள் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளின் விலைகளை திருத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அண்மைக்காலமாக அரசாங்கத்திடம் சம்பந்தப்பட்ட தரப்பினர் பல கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.