இன்றைய வானிலை தொடர்பான அறிவிப்பு!

Date:

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

ஊவா மாகாணத்திலும், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

Popular

More like this
Related

திருகோணமலை விகாரை தொடர்பான வழக்கு விசாரணை டிசம்பர் 16 வரை ஒத்திவைப்பு!

திருகோணமலை ஸ்ரீ சம்புத்த ஜயந்தி போதிராஜ விகாரையின் ஒரு பகுதியைக் அகற்றுமாறு...

தனி ஒருவரின் செயலை வைத்து இலங்கையை மதிப்பிட வேண்டாம்; வலியுறுத்திய நியூசிலாந்து பெண்

இலங்கையில் முச்சக்கர வண்டியொன்றில் பயணித்தபோது, பின்னால் துரத்தி வந்த நபரொருவரால் பாலியல்...

நாமலின் சட்டக் கல்லூரி கோப்பில் பட்டப்படிப்பு சான்றிதழ் இல்லை: பாராளுமன்றில் நளிந்த ஜயதிஸ்ஸ.

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் சட்டத்தரணி பட்டம் போலியானது என அமைச்சர்...

லெபனானில் பலஸ்தீன அகதிகள் முகாம் அருகே இஸ்ரேல் தாக்குதல்; 14 பேர் பலி

இஸ்ரேலின் தாக்குதலில் லெபனானின் தெற்கில் உள்ள பலஸ்தீன அகதிகள் முகாம் அருகே...