‘எனக்கு பாராளுமன்றத்திற்கு வருவதற்கே வெட்கமாக உள்ளது’: சபையில் திகாம்பரம்

Date:

‘கோட்டா கோ’ என்று கூறியவர்கள் வீட்டிற்கு சென்று அமைச்சு பதவிகைளை பெற்றுக்கொண்டுள்ளனர், இவ்வாறான விடயங்களினால் தான் பாராளுமன்றத்திற்கு வருவதற்கு வெட்கப்படுவதாகவும் அடுத்த முறை அரசியலில் இருந்து விலக வேண்டும் என நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.

இன்று (20) பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

‘கோட்டா வீட்டுக்குப் போ, கோட்டா பெயில், 225 வேண்டாம்’ என்று கூறியவர்கள் என்று கூச்சலிட்டவர்கள் இன்று ஜனாதிபதியின் வீட்டுக்குச் சென்று அமைச்சுப் பதவிகளைப் பெற்றுக் கொண்டதாகவும் இவை என்னவென்று புரியவில்லை எனவும் திகாம்பரம் தெரிவித்தார்.

இவர்கள் நாட்டிற்காக செல்லவில்லை தமக்காகவே சென்றுள்ளனர் எனவும் திகாம்பரம் தெரிவித்தார்.

மேலும், பெருந்தோட்டப் பகுதிகளில் விவசாயம் செய்யப்படாத காணிகளை மக்களுக்கு பயிர்ச் செய்கைக்காக பகிர்ந்தளிக்குமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதனால் உணவுப்பற்றாக் குறையால் ஏற்படும் பாதிப்புகளுக்கு மலையக மக்கள் இவ்வாறு காணிகளை பகிர்ந்தளித்தால் அவர்கள் விவசாயம் செய்து பிழைத்துக்கொள்வார்கள்.

இதேவேளை 1983 கலவரத்தை நாங்கள் கண் கூடாக பார்த்தோம் தமிழ் மக்களை கொன்று குவித்தார்கள். அதையும் தற்போது இடம்பெற்ற வன்முறைசம்வபத்தையும் சரிசமப்படுத்தவில்லை. மே 9 கலவர பின்னணியை கண்டுபிடித்து உண்மையை வெளிக்கொணர வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...

இளைஞர்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கு!

INSIGHT நிறுவனத்தின் புத்தளம் வளாகம் ஏற்பாடு செய்துள்ள 'இளைஞர்களை தொழில்முனைவராக்கும்  பயணம்...