எரிபொருளைக் கொண்டு செல்ல பொலிஸ் பாதுகாப்பு தேவை: தனியார் எரிபொருள் தாங்கி உரிமையாளர்கள்

Date:

இலங்கை பெற்றோலிய தனியார் தாங்கிகள் உரிமையாளர்கள் சங்கம், எரிபொருள் கொண்டு செல்லும் போது பாதுகாப்பு வழங்குமாறு பொலிஸ் மா அதிபரிடம் இன்று கோரிக்கை விடுத்துள்ளது.

கடந்த சில நாட்களாக குறிப்பிட்ட சில குழுக்கள் செய்த பல்வேறு இடையூறுகளை மேற்கோள் காட்டி, சங்கத்தின் இணைச் செயலாளர் டி.வி சாந்த சில்வா எரிபொருள் போக்குவரத்தின் போது பாதுகாப்பு வழங்கப்படாவிட்டால் கடமைக்கு சமூகமளிக்க முடியாது என பொலிஸ் மா அதிபரிடம் தெரிவித்தார்.

இதேவேளை இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் இன்று (22) சராசரியாக 3,600 மெட்ரிக் தொன் 92 ஒக்டேன் பெற்றோலை விநியோகிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வழமையான நாட்களில், ஞாயிற்றுக்கிழமைகளில் எரிபொருள் விநியோகம் நடைபெறாது. எவ்வாறாயினும், இன்றும் எரிபொருள் விநியோகம் தொடர்கிறது, குறிப்பாக 92 ஒக்டேன் பெற்றோலின் விநியோகம் தொடர்கிறது.

Popular

More like this
Related

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...

சில மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம்

இன்றையதினம் (06) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மாகாணங்களிலும் காலி,...

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும்,“அபுநானா நாடகப்புகழ்” கலைஞா் எம்.எம்.ஏ. லத்தீப் காலமானாா்.

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும், தொலைக்காட்சி “அபுநானா நாடகப்புகழ்” மற்றும் முஸ்லிம்...