எரிபொருள் விலை அதிகரிப்பு தொடர்பில் கஞ்சன விஜேசேகர விளக்கம்!

Date:

எரிபொருள் விலைகள் தொடர்பான விலைச்சூத்திரத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த விலைச்சூத்திரத்தின் அடிப்படையில் எரிபொருள் விலைகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இதேவேளை, சர்வதேச சந்தையில் நிலவும் எரிபொருள் விலை மற்றும் ஏனைய காரணிகள் என்பவற்றை கருத்தில் கொண்டு இவ்வாறு விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக, அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த விலைச்சூத்திரத்தில் எரிபொருள் இறக்குமதி செலவுகள், தரையிறக்குவதற்கான செலவுகள், விநியோகிப்பதற்கான செலவுகள் மற்றும் வரி கட்டணம் என்பற்றின் அடிப்படையில் விலை திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ள போதிலும் எந்தவித இலாபமும் இதனூடாக கிடைக்காது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

கஞ்சிப்பானி இம்ரானின் சகாக்கள் இன்று நாட்டிற்கு

மலேசியாவில் கைதுசெய்யப்பட்ட பிரபல பாதாள குழு செயற்பாட்டாளர்களாக கருதப்படும் மூவர் இன்று...

சாகர காரியவசம் குற்ற விசாரணைப் பிரிவால் கைது

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) பொதுச் செயலாளரான சட்டத்தரணி சாகர காரியவசம்...

கடந்த 9 நாட்களில் 4292 டெங்கு நோயாளர்கள் அடையாளம்

வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 89,639 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய...

சிறைச்சாலைகள் திணைக்களத்திற்கு புதிய ஊடகப் பேச்சாளர் நியமனம்!

சிறைச்சாலைகள் திணைக்களத்தின் புதிய ஊடகப் பேச்சாளராக சிறைச்சாலைகள் ஆணையாளர் சேனக்க பல்லேதன்ன...