நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக அனைத்து அரசியல் கட்சிகளின் செயலாளர்களுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழு எதிர்வரும் 6 ஆம் திகதி அழைப்பு விடுத்துள்ளது.
அன்றைய தினம் காலை 10.00 மணிக்கு இந்த சந்திப்பு நடைபெறும் என அதன் தேர்தல்கள் ஆணைக்குழு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை அண்மையில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் நாட்டின் நிலைமை குறித்தும் கலந்துரையாடினர்.