கதிர்காம உற்சவம் ஜூலை 28 கொடியேற்றத்துடன் ஆரம்பம்!

Date:

கதிர்காம பாத யாத்திரை எதிர்வரும் ஜுன் 4 ஆம் திகதி ஆரம்பமாகிறது.

கதிர்காமம் திருவிழாவினை முன்னிட்டு தொண்டைமானாறு செல்வச்சந்தியிலிருந்து கதிர்காமம் நோக்கிய பாத யாத்திரையானது வருடாவருடம் இடம்பெற்று வருகின்றமை நாம் அறிந்த விடயமே.

எனினும், கடந்த இரு ஆண்டுகளாக கொரோனா தாக்கம் காரணமாக பாதயாத்திரை இடம்பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. தற்போது காலம் ஓரளவு கனிந்துள்ளது. எனவே, இந்த வருடம் பல்லாயிரக்கணக்கான அடியார்கள் கதிர்காமம் நோக்கி பாதயாத்திரையில் பயணிக்கவுள்ளனர். அவர்கள் குழுவாகவும், தனியாகவும் பயணிப்பது வழக்கம்.

பிரதான பாதயாத்திர குழுவினர் எதிர்வரும் 04.06.2022 காலை 8.00 மணிக்கு தொண்டமானாறு செல்வச்சந்நிதியிலிருந்து புறப்படவுள்ளனர்.

இதேவேளை, கதிர்காம கந்தனின் ஆடி மகா உற்சவம் ஆடி மாதம் 28ம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி ஆவணி மாதம் 11ம் திகதி தீர்த்தோற்சவத்துடன் இனிதே நிறைவடையவிருப்பது குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

சீன வெளிவிவகார அமைச்சர் இலங்கை வருகை

சீன வெளிவிவகார அமைச்சர் வொன்க் ஈ இலங்கைக்கு ஒரு நாள் விஜயமாக...

புத்தளம் – கொழும்பு வீதியில் கோர விபத்து : மூவர் உயிரிழப்பு!

புத்தளம் – கொழும்பு பிரதான வீதியின் முந்தலம் – நவதன்குளம்  பகுதியில் இன்று...

நாட்டின் பெரும்பான்மையான பகுதிகளில் மழை

நாட்டின் பெரும்பான்மையான பகுதிகளில் இன்றைய தினம் மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம்...

முதலில் சுடுவோம்; பிறகுதான் பேசுவோம்: அமெரிக்காவுக்கு டென்மார்க் எச்சரிக்கை

கிரீன்லாந்துக்குள் அமெரிக்க வீரா்கள் நுழைந்தால், தளபதிகளின உத்தரவுக்காக காத்திராமல் தங்கள் நாட்டு...