ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சனத் நிஷாந்த மற்றும் மிலன் ஜயதிலக்க ஆகியோரை எதிர்வரும் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
மே மாதம் 09 ஆம் திகதி காலிமுகத்திடல் போராட்டக் களம் மீது தாக்குதல் நடத்த காரணமாக இருந்தார்கள் என்று குற்றச்சாட்டின் பேரில் இவர்கள் கைதுசெய்யப்பட்டனர்.